சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி இலவச அடுப்புடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விண்ணப்பிக்கும் முகாம் சேலத்தில் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் பாஜகவினரால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட பாஜகவிற்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி மண்டலத்தின் சார்பில் ஏழை எளியவர்களுக்கான இலவச அடுப்புடன் கூடிய எரிவாய்வு சிலிண்டர் விண்ணப்பிக்கும் முகாம் சேலம் தாதகாப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமினை சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் நிர்வாகிகள் கோபிநாத் செந்தில்குமார் சுமதி விஸ்வநாதன் கௌதம் மற்றும் சுரேஷ்பாபு உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமில் தாதகாப்பட்டி சீலநாயக்கன்பட்டி அன்னதானப்பட்டி லைன்மேடு நெத்திமேடு மற்றும் அதன் சுற்றுவட்டவர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படிவங்களை பெற்று அதற்கான ஆதாரங்களை கொடுத்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் விரைவில் சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் நிறுவனத்தின் மூலமாக உரிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்களுக்கு விரைவில் அடுப்புடன் கூடிய இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று முகாமினை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தெரிவித்தார்.

0 coment rios: