சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பகுத்தறிவு பகலவரின் 147 வது பிறந்தநாள் விழா. ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 1047 வது பிறந்தநாள் விழா திராவிட கட்சியினரால் இன்று தமிழக முற்பட நாடு முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட ஆதி தமிழர் பேரவை சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் மாரியப்பன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமாயி மாவட்டஇளைஞர் அணி செயலாளர் மாணிக்கம் மாநகர் செயலாளர் கல்யாணி மாவட்ட தோட்ட அணி செயலாளர் அருண் மாவட்ட நிதி செயலாளர் இளையராஜா சேலம் ஒன்றிய செயலாளர் தினேஷ் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் மணி மற்றும் கழக செயலாளர்கள்,கழக முன்னோடிகள் நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு பகுத்தறிவு பகலவரின் தத்துவங்களை முழக்கங்களாக கோஷமிட்டு மகிழ்ந்தனர்.

0 coment rios: