சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாரதப் பிரதமரின் பிறந்த நாள் விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அதிமுக கவுன்சிலரால் கிழித்து அசிங்கப்படுத்தப்பட்ட விவகாரம். பாஜக அதிமுகவினர் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் சூழல் உள்ளதால் சேலம் வலசையூர் பகுதியில் கடுமையான பதற்றம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் பாஜகவினரால் எழுச்சிமிகு விழாவாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பு முகாம்களை நலத்தையும் ஏழை எளியவர்களுக்கு பயன்பெறும் வகையில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சேலம் அயோத்தியபட்டினம் கிழக்கு ஒன்றியம் வலசையூர் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேனர் வைத்த சந்தோஷத்தில் நிர்வாகிகள் இன்று காலை வந்து பார்க்கும்போது பேனர்கள் அத்தனையும் கிழிந்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடையுங்கள் பாஜக வழக்கறிஞர் அஜித் சாக்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் விசாரணை மேற்கொண்ட போது, கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளால் வைக்கப்பட்டிருந்த பேனரை கூட்டணி கட்சியில் உள்ள ADMK சேர்ந்த கவுன்சிலர் அருண்குமார் என்பவர் கிழித்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது தெரிய வந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாஜக கூட்டணி கட்சி நாகரிகம் கூட தெரியாமல் இதுபோல செய்வது சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அழகல்ல என்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு வேறு இடத்தில் வைக்க சொல்லி சரி செய்ய வேண்டும் என்று கூறிய சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகி வழக்கறிஞர் அஜித் சாக்கோ, பாரதத்தின் பிரதமர் அனைவருக்கும் பிரதமரை ஆவார் என்றும் இல்லையென்றால் கடும் கண்டனம் ஆர்ப்பாட்டம் அதிமுகவிற்கு எதிராக சேலம் வலசையூர் பகுதியில் மேற்கொள்ள உள்ளதோடு சம்பந்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் இதற்கு வருத்தம் தெரிவிக்க தவறும் பட்சத்தில் கடுமையான போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால், சேலம் வலசையூர் பகுதியில் ஒரு பதற்றமான சூழல் உருவாகும் நிலை அதிமுக கவுன்சிலரால் உருவாகி உள்ளதாக சேலம் கிழக்கு மாவட்ட சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் வழக்கறிஞர் அஜித் சாக்கோ தெரிவித்துள்ளார்.

0 coment rios: