மும்பையில் இருந்து பவானிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிறந்து 10 நாட்களே பெண் குழந்தை மீட்பு
வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
பவானி, நவ. 20-
ஈரோடு மாவட்டம் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பவானி போலீசார் ஈரோடு சைல்டு லைன் அதிகாரிகள் பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் பிறந்து 10 நாட்களே ஆனா பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
இந்த அடுத்து வீட்டில் இருந்த பிரவீன் (31) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
மும்பையில் இருந்து பிறந்து 10 நாட்களே ஆனா .
பெண் குழந்தையை இரு பெண்கள் பவானிக்கு கொண்டு வந்து பிரவீன் இடம் விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. அந்த குழந்தையை அவர்கள் பெற்றோர்களின் மூளை செலவை செய்து வாங்கி வந்தார்களா? அல்லது கடத்தி வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை அடுத்து அந்த குழந்தையை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பிரவீன் இடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக பெங்களூரில் இருந்து 8 மாத பெண் குழந்தை கடத்தி வரப்பட்ட வழக்கில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் கடந்த மாதம் சித்தோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துடைப்பம் பின்னும் தொழிலாளர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு 25 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு கணவன் -மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மும்பையிலிருந்து பிறந்து 10 நாட்களே ஆனா ஆண் குழந்தை கடத்தி வரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபா செய்திகளுக்காக
பவானி குட்டி..


0 coment rios: