ஞாயிறு, 23 நவம்பர், 2025

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா – ஈரோடு

JCI ஈரோடு எக்ஸெல், ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைசிறந்த ஆசிரியர்களுக்கான 14-வது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரீபா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள மாநில முன்னாள் ஆளுநர் நீதியரசர் P. சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 324 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், டிரஸ்டி யுவராஜா மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயராமன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய 10,000-க்கும் மேற்பட்ட தகவல்களை கொண்ட JCI Excell Yellow Pages 2025 புத்தகத்தை நீதியரசர் P. சதாசிவம் வெளியிட்டார்.
விழா ஏற்பாடுகளை ஈரோடு எக்ஸெல் பதிப்பக CEO முருகானந்தம், JCI ஈரோடு எக்ஸெல் தலைவர் நம்பி ஆரூரன், எக்ஸெல் எடுகாம் இயக்குநர் ராஜேந்திர பிரசாத், உதவித்தலைவர் பிரபாகரன், Women Empowerment Cell மற்றும் JCI உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: