சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்திற்கு அருகே அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார்.
சேலத்தை அடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டி, சாமியார் கடை பேருந்து நிறுத்தம் அருகே அதிநவீன முறையில் மாஸ்டர்ஸ் ஜிம் பிட்னஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் உடற்பயிற்சி 3 வது மையம் திறப்பு விழா நடைபெற்றது. பாமக முன்னால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் நல்லாசியுடன் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பயிற்சி மையத்தின் உரிமையாளர் இளங்கோ தலைமை தாங்கினார். பயிற்சி மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில், பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய உடற்பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பயிற்சி மையத்தினை பார்வையிட்ட அவர் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு அசத்தினார்.
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்திம் சர்க்கார் கொல்லப்பட்டியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மாஸ்டர்ஸ் ஜிம் பிட்னஸ் ஸ்டுடியோ பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும், இது போக தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் இளங்கோ தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆண்கள், பெண்களுக்கு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் பாமக மாவட்ட செயலாளர் சரவண கந்தன் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தங்கராசு மேற்கு தொகுதி பொறுப்பாளர் சண்முகம் அமைப்பு செயலாளர் சிவா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி மைய உரிமையாளருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும்தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



0 coment rios: