சேலம்.
எஸ் கே சுரேஷ் பாபு.
சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பேச விளக்கு கிராமம் அணை மேடு பகுதியில் உள்ள அருள்மிகு ராஜ முருகன் ஆசிரமம் 56 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 56 ஆண்டுகளை நினைவு படுத்தும் விதமாக ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்க திட்டமிட்டு அதற்கான படியும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் முருகப்பெருமானுக்கு அழகன் முருகன் என்ற பெயரும் உண்டு. அந்த அழகை சீர்குலைக்கும் விதமாக அவளைச் சின்னமாக முதற்கட்டமாக அமைக்கப்பட்ட சிலை அமைந்து தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனை அடுத்து சிற்பக் கலை மாமணி விருது பெற்ற ஸ்தபதிகள் முருகன் மற்றும் அசோகன் ஆகியோரின் வாயிலாக ஆசிரம நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் திருவுருவச் சிலை அமைக்க முடிவு செய்தது. தனது ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்று அழகன் முருகன் என்ற பெயருக்கு ஏற்ப மிக கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டு ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட முருகப்பெருமானுக்கு நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் முளைப்பாரி போடுதல் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் இன்று காலை மங்கல இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற தீர்த்தக்கோட ஊர்வலமானது திருக்கோவிலை அடைந்ததும் விநாயகர் பூஜை புண்ணியாகும் வாஸ்து சாந்தி மிருத்சங்கரனம் கும்பலங்காரம் முதல் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதியும் நடைபெற்றன. திருக்கோவிலைடைந்து தீர்த்தக்கரை ஊர்வலம் ஆனது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் பாதத்தில் தீர்த்தத்தை ஊற்றி வணங்கி வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நாளை இரண்டாம் காலை ஆக பூஜைகள் நாடி சந்தானம் பரிசாஹுதி பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட அழகன் எம்பெருமான் ஸ்ரீ ராஜ முருகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற உள்ளன.
இதனை அடுத்து ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் நாளை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் ஞானகுரு வெங்கடாசலம் சுவாமிகள் ராஜேந்திரன் மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.


0 coment rios: