ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!
ஈரோட்டில் கண் கண்ணாடிகள் மற்றும் பிரேம்களுக்கென பிரத்யேக நிறுவனமாக பிரைட் ஆப்டிகல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 53ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவை நிறுவன உரிமையாளர் கேசவன்,மங்கையர்க்கரசி கேசவன் கேக் வெட்டி துவக்கி வைத்தனர். வருகை தந்த அனைவரையும் குமரேசன்,சங்கீதா குமரேசன் ஆகியோர் வரவேற்றனர்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சக்தி மசாலா துரைசாமி,சாந்தி துரைசாமி, பி.வி.பி பள்ளி தாளாளர் டாக்டர். எல்.எம்.ராமகிருஷ்ணன், எஸ்.கே.ஆர். மஞ்சள் மண்டி முத்துக்குமார்,கண் மருத்துவர்கள் எஸ்.எஸ்.சுகுமார், எல்.வி.சண்முகநாதன், வி.பன்னீர்செல்வம், என்.வி.கோவிந்தராஜீ, எஸ்.எஸ்.ராகவேந்திரன்,தோல் டாக்டர் சின்னச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்பொழுது உரிமையாளர் கேசவன் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் பேராதரவுடன்
53ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் ஈரோட்டில் முதல் முறையாக ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில் ப்ளூடூத், வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங், போட்டோ கேப்சர், வீடியோ கால் வசதி, வாய்ஸ் கால் வசதி ஆகிய அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது. மேலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டோம் போர்ட், மௌன் பிளாக், குஷி,ஹோஹோ பாஸ், டிடா லேன்சர், மைக்கேல் கோர்ஸ், மினா மோடோ, ரேபான் மெட்டா, பார்பரி, போன்ற பிரேம் வகைகளும், மௌவி ஜிம், ரேபான், போலிஸ் போன்ற சன் கிளாஸ்களும், பிரசித்தி பெற்ற ஜெய்ஸ், ரோடன் ஸ்டாக், ஹோயா,நிகான் போன்ற லென்ஸ் வகைகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் விற்பனை செய்து வருகிறோம். 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20ந் தேதி வரை சன் கிளாஸ், ஸ்பெக்டக்கல்ஸ் ரூ.3000த்திற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபா செய்திகளுக்காக
பவானி குட்டி


0 coment rios: