சேலம்,
எஸ் கே சுரேஷ் பாபு.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாடுட்டிற்கு கடந்த 19.11.2025 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தந்து மாநாட்டு விழாவில் உரையாற்றிய போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் கண்டு மேடையில் இருந்தவாறு சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல தமிழ்நாட்டிலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறுவது போல் அலை வீசுகிறது என்று பேசிய வார்த்தை மாநாட்டில் பங்கேற்ற தென்னிந்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கிய பேசு பொருளாக பார்க்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல் தமிழ்நாட்டிலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி அலை வீச வேண்டுமென்றால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொட்களுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலை MSP_ யை மத்திய அரசு விரைவில் அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் விவசாயம் சார்ந்த மத்திய அரசு கூட்ட மேடைகளில் பேசும் போது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என கூறியது போல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு பெறுவதற்கு உண்டான நடைமுறை சாத்தியக்கூறுகளை காலம் தாழ்த்தாமல் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்தது முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல் தமிழ்நாட்டிலும் தமிழக விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள் என மாண்புமிகு பாரத பிரதமர் பேசிய வார்த்தைக்கு உண்டான விளக்க அறிக்கையை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


0 coment rios: