சேலம்.
எஸ் கே சுரேஷ் பாபு.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகள் மழையில் நனைந்தவாறு உள்ளது.
மத்திய அரசு 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதி கொடுத்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டது ஆனால் மத்திய அரசு 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி தரவில்லை. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக மறு பரிசீலனை செய்து 22% இருப்பதும் உள்ள நிலை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.



0 coment rios: