சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.
சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவில் இரண்டு விருதுகள்
கேப்ஜெமினி நிறுவனம் நடத்திய போட்டியில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகை வென்று சோனா கல்லூரி மாணவன் சாதனை.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE) துறையின் 3 ஆம் ஆண்டு மாணவரான திரு. பி. விஜய், நாட்டின் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யும் கேப்ஜெமினி பிராண்ட் குவெஸ்ட் 2025 போட்டியில் வெற்றியாளராகத் திகழ்ந்துள்ளார். இப்போட்டியின் இறுதி மேடைச் சுற்று நவம்பர் 21, 2025 அன்று புனேயில் உள்ள கேப்ஜெமினி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகையை கல்லூரியின் மாணவர் விஜய்-க்கு வழங்கப்பட்டது மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார்-க்கு வழங்கப்பட்டது. சோனா கல்லூரியில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வர். செந்தில்குமார், துறை தலைவர் பத்மா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர். மாணவர்களின் உளமார்ந்த ஆர்வம், ஆழமான அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றன.
கேப்ஜெமினி நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வணிக துறைகள், தொழில்நுட்ப தீர்வுகள், சந்தை நிலை, போட்டியாளர்கள் மற்றும் நிதிநிலை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பதே இத்தேர்வின் முக்கிய அம்சமாகும். எனவும் மேலும் நாட்டின் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து, விஜய் தன்னுடைய தனி திறனை வெளிப்படுத்தி முன்னிலை பெற்றுள்ளார் என கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தெரிவித்தார்.
கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் பேசும் பொழுது ஒரு சாமானிய பெற்றோரின் மகன் இந்த அரிய சாதனையை படைத்து இந்த விருதினை பெற்றது பெருமைக்குரியதாகும் மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது என இரண்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளது சிறப்புடையதாகும் எனவும் அவர்கள் தெரிவித்த போது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் விதமாக தன்னை அறியாமல் பெற்றோர்கள் கண்கலங்கியது அங்கு காண முடிந்தது.
மாணவர் விஜய் அவர் கலந்து கொண்டு போட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடந்து கொண்டு வெற்றி பெற்று இருந்தாலுமே கூட மாணவனின் திறமை தனித்துவம் அறிவுத்திறன் ஆகியவற்றை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தெரிவித்தது அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் தலைவர் பத்மா, வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சரவணன், உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.



0 coment rios: