செவ்வாய், 25 நவம்பர், 2025

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதற்காக சென் னையில் இருந்து இன்று விமானத்தில் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை 6.30 மணிக்கு ஈரோடு புறப்படுகிறார்.

ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது போல் பெருந்துறை மற்றும் ஈரோடு மேட்டுக்கடை பகுதி களில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிர மாண்ட வரவேற்பு அளிக் கப்படுகிறது. இவ்வாறு வழி நெடுகிலும் ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதன்பின்னர் இரவு 8.30 மணிக்கு ஈரோடு காலிங்கரா யன் விருந்தினர் மாளிகைக்கு வந்துசேருகிறார். அங்கு இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
ரூ.605 கோடியில் திட்டங்கள்

காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறை ரோடு, ரிங் ரோடு, பூந்துறை ரோடு வழி யாக ஜெயராமபுரம் செல்கி றார். காலை 10 மணிக்கு அங்கு புதிதாக அமைக்கப் பட்டுள்ள பொல்லான் உரு வச்சிலையை திறந்து வைத்து, அரங்கையும் திறந்து வைக்கிறார். அங்கிருந்து ஓடாநிலை. செல்லும் அவர், காலை 10.20. மணிக்கு தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து புறப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை 10.45 மணிக்கு சோலாரில் புதிய பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு தலைமை தாங்கி, ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்றதிட் லு டப்பணிகள், புதிய திட்டங் கள் என ரூ.605 கோடி மதிப் பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக் கிறார்.
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். 
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந் தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பி டும் முதல்-அமைச்சர் மாலை வரை ஓய்வெடுக்கிறார்.

மாலை 4.45 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சித்தோடு ஆவின் வளாகத்தில் அமைக் - கப்பட்டுள்ள முன்னாள் எம். பி.யும் கூட்டுறவு பால் பண்ணை நிறுவனருமான எஸ்.கே.பரமசிவம் உருவச்சி லையை மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சித்தோட்டில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கும் அவர் மாலை 6.20 மணிக்கு கோவை புறப்பட்டு செல்கிறார். இரவு கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்று சேருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வரு கையை முன்னிட்டு அவர் வந்து செல்லும் வழி நெடுகி லும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 3,100 போலீசார்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: