சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....
உலக அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச உலக திறனறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சேலம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த கே.சஞ்சய் கண்ணா வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து
சேலம் வருகை தந்த அவருக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு வீரரின் தந்தை கண்ணன், நாமக்கல் கபடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஆவின் மேலாளர் சிவலிங்கம், முன்னாள் கபடி வீரரும் காவல்துறை அதிகாரியுமான கென்னடி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி சூர்யா,கராத்தே குமார், பேட்மிட்டன் பயிற்சியாளர் கிரிவாசன், பெரிய புதூர் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.



0 coment rios: