சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி.
சேலம் மாநகர் மாவட்ட மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அகில இந்திய மகிலா காங்கிரஸ் தலைவி சோபா ஹோஜா சேலம் வந்தார். அவர் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மேற்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் தேர்வுக்காக கருத்துக்களை கேட்டறிந்தார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொண்டு புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்வது குறித்து கருத்து மற்றும் விண்ணப்பங்கள் பெரும் பணி முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் மேலிட பார்வையாளர் சோபா ஹோஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர் மாவட்ட தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர், துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சோபா ஹோஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸில் மாவட்ட கமிட்டிகளை அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் இயக்கம் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாக கூறிய அவர், கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கட்சி வளர்ச்சி அடைய செய்யும் வகையிலும் செயல்படும் நபர் மாவட்ட தலைவர் பதவியில் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
இதற்காக விண்ணப்பம் வழங்கும் நபர்களில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு வழங்குவேன் என்று கூறியதுடன் அதில் இருந்து நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் 58 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் காங்கிரஸ் உயிர் போடு இருக்கிறது என்றார். களத்தில் பணியாற்ற தயாராக இருக்கின்றார்கள் என்றும் இந்த மாவட்ட தலைவர் நியமனத்தில் எஸ்சி எஸ்டி ஓபிசி மகளிர் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பிரதமர் மோடி ஒடிசா பீகாரில் தமிழர்களை இழிவு படுத்தி பேசிவிட்டு தற்பொழுது தமிழகத்தில் தேர்தல் வருவதால் பாசாங்கு செய்து உயர்த்திப் பேசுவதாகவும் குற்றம் சாட்டிய அவர் இது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அவர் நடத்தும் நாடகம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணையம் விசாரணை அமைப்புகளை கையில் வைத்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்டம் போடுவதாகவும் விமர்சித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: