சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிற்றுண்டி.
தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தமிழக அரசு செவித்திறன் குறைபாடு பள்ளி சிறார்களுக்கு சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 31வது கோட்ட திமுக செயலாளர் சையது இப்ராஹிம், 32வது கோட்ட டிவிசன் 31வது கோட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திலீபன், 31வது கோட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவா, 22 ஆவது கோட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சத்யா மற்றும் 29ஆவது கோட்ட டிவிசன் செயலாளர் உட்பட இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானூர் கலந்து கொண்டு துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியவர்களுக்கு உதவும் நாளாக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



0 coment rios: