சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜாமியா மசூதியின் முன்னாள் மூத்தவல்லியும், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அ மான் என்கின்ற நாசர் கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், சேலம் மத்திய மாவட்ட திமுகவின் கோட்டை பகுதி திமுக செயலாளர் சையது இப்ராஹிம், 31வது கோட்ட திமுக செயலாளர் அப்துல் ரசாக், 29ஆவது கோட்ட திமுக செயலாளர் சிவகுமார் மற்றும் 32 வது கோட்ட திமுக செயலாளர் கபீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலை மற்றும் சேலம் சத்திரம் ஆகிய பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.
குறிப்பாக சேலம் அண்ணா பூங்கா பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலை அருகே நடைபெற்ற இனிப்புகள் வழங்கும் விழாவின்போது அப்பொழுது கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உடைகளுடன் அந்த பகுதியாக வந்த பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி திமுகவினர் மகிழ்ந்தனர். இந்த நிகழ்வுகளில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியவர்களுக்கு உதவும் நாளாக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



0 coment rios: