சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் அரிசி பாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிசி பாளையம் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பாசில் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சேலம் சேலம் மத்திய மாவட்ட திமுகவின் மாநகர செயலாளர் ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். இதே போல சேலம் அம்மாபேட்டை ஜோதி திரையரங்கம் அருகே உள்ள அம்மா உணவகம் முன்பு பொதுமக்கள் உட்பட ஏழை எளியவர்களுக்கு இனிப்புகளும் வழங்கிக் கொண்டாடப்பட்டன. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன், 34 ஆவது கோட்ட செயலாளர் குணசேகரன் 34 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உட்பட தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை ஏழை எளியவர்களுக்கு உதவும் நாளாக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



0 coment rios: