சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
தமிழக துணை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேலம் மாநகர திமுக இளைஞரணி செயலாளர் கேபிள் சரவணன் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். இதே போல அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதோடு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: