சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாள் விழா. சேலம் மத்திய மாவட்ட திமுக கோட்டை பகுதி சார்பில் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
தமிழக துணை முதலமைச்சரும், திராவிட நாயகரும் மற்றும் திமுகவின் இளம் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழா திமுகவினரால் இன்று தமிழக முழுவதும் வெகு உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக 31வது கோட்ட கோட்டை பகுதி சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆணையின்படி சேலம் கோட்டை அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் மூத்தவல்லியும், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர் கான் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் 31 வது கோட்ட குகை பகுதி திமுக செயலாளர் சையது இப்ராஹிம் மற்றும் திமுக நிர்வாகி அஸ்மத் கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமான் என்கின்ற நாசர் கான், தமிழக அரசின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டு பேசிய அவர் ஏழை எளியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரில் நலன் காக்கும் அரசாக திமுக அரசு விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகம் உட்பட s.i.r என்ற பெயரில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதனை சேர மத்திய மாவட்ட வாக்காளர்கள் விழிப்புடன் செயலாற்றி விழித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள் உட்பட 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடரி நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அன்னதான நிகழ்வில் காத்திருந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு முட்டையுடன் கூடிய பிரியாணி அன்னதானமாக வழங்கி மகிழ்ந்தார். நிகழ்ச்சியில்
31வது கோட்ட திமுக செயலாளர் அப்துல் ரசாக், 29ஆவது கோட்ட திமுக செயலாளர் சிவகுமார் மற்றும் 32 வது கோட்ட திமுக செயலாளர் கபீர் மற்றும் பகுதி இளைஞரணி அமைப்பாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



0 coment rios: