*ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்தார்...*
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி, நிருபர்களிடம்...
கடந்த, 4 முதல் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டு டிச., 4 வரை திரும்ப பெறப்படும். வரும், 30க்குள் படிவங்களை பெற்று, பதிவேற்றப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்படுகிறது. இம்மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 1 சதவீதம் தவிர மற்றவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன. அப்படிவங்களும் இரு தினங்களில் வழங்கப்பட்டுவிடும். இதுவரை, 14 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1,946 படிவங்கள் ஆன்லைனில் நிரப்பி அனுப்பி உள்ளனர்.
பெறப்பட்ட, 73 சதவீத படிவங்களில் கடந்த, 2002 வாக்காளர் விபரத்துடன் பூர்த்தி செய்த அல்லது பி.எல்.ஓ.,க்களால் உறுதி செய்த, 25 சதவீத வாக்காளர் (4.95 லட்சம்) விபரம் பதிவேற்றி, உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் என, 26 சதவீதம் (5.22 லட்சம்) பேர் படிவமும் உறுதி செய்து, 51 சதவீத படிவங்கள் இடம் பெறும்.
‘ஆள் இல்லை, இடமாற்றம், இறந்துவிட்டார்’ என்ற, 3 இனங்களில், 58,875 படிவங்கள் (2.95 சதவீதம்) உள்ளன. ‘நோ மேட்ச்’ என்ற இனங்களில் கடந்த, 2002 வாக்காளர் பட்டியல் விபரம், உறவினர் வாக்காளர் பட்டியல் இணைப்பு விபரம் வழங்காதவர்களை நீக்கம் செய்யவில்லை.
டிச., 4க்குள் பெறப்படும் அனைத்து படிவங்களும் பதிவேற்றம் செய்து, டிச., 9 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் இடம் பெற்றவர்கள் தவிர, இடம் பெறாதவர்களுக்கு ஆவணங்கள் மூலம் மீண்டும் வாக்காளராக படிவம் வழங்கி திரும்ப பெறப்படும்.
அதுபோல, 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளரும் படிவம்–6ஐ வழங்கி இணையலாம். இவ்வாறானவர்கள் தங்களது ஆவணங்களை வழங்கி, அதன் மூலம் பிப்., 7 ல் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவர்.
இடம் பெயர்ந்தோர், விடுபட்டோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உரிய படிவங்களை வழங்கி, ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகத்துக்கு அந்தந்த பகுதி பி.எல்.ஓ.,க்கள், உதவி மையங்கள், ெஹல்ப் டெஸ்க், தேர்தல் ஆணைய இணைய தளம் மூலம் தீர்வு பெறலாம்.
பீகார் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும், இங்கு வெகு காலமாக இருந்து, படிவத்தில் கேட்கப்பட்ட விபரம் சரியாக இருந்தால் சேர்க்கப்படுவர் என தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர்கணேஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா ஆகியோர் உடனிருந்தார்.



0 coment rios: