திங்கள், 3 நவம்பர், 2025

சேலம் அருகே பெண் சமூக சேவருக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள். தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுத்து உயிர் பாதுகாப்பு வழங்க பெண் சமூக சேவகர் அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே பெண் சமூக சேவருக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள். தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுத்து உயிர் பாதுகாப்பு வழங்க பெண் சமூக சேவகர் அரசுக்கு கோரிக்கை. 

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சரசு. இவர் இந்திய குடியரசு ( கபாய் ) கட்சியின் மாநிலத் துணை தலைவராக இருந்து வருகிறார். மேலும் புதிய புத்தா  அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கி அதற்கு தலைவராகவும் சரசு இருந்து வருகிறார். கண் பார்வையற்றவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு என பிரத்தியேகமாக நடத்தப்படும் இந்த அறக்கட்டளையின் வாயிலாக ஊனமுற்றவர்களுக்கான தேவைகள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பூர்த்தி செய்து வருவதோடு, இவர்களுக்கு தமிழக அரசால் கிடைக்கும் அனைத்து பணிகளையும் செய்து வருவதால் அந்த பகுதி ஊனமுற்றோர் இடையே மிகுந்த வரவேற்பினை சரசு பெற்றுள்ளார். 
இதனை பொறுத்துக் கொள்ளாத அதே பகுதியை சார்ந்த சில தீய சக்திகள் நாள்தோறும் சரசு நடத்திவரும் அறக்கட்டளை அலுவலகத்தை நோட்டமிடுவது, அவருக்கு தெரிந்து அவரை புகைப்படம் எடுப்பது மற்றும் இது போன்ற சேவைகளை இனிவரும் காலங்களில் செய்யக்கூடாது என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து வருவதாக  நம்மிடையே  தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதிய புத்தா  அறக்கட்டளையின் வாயிலாக பயன் பெற்று வரும் பயனாளர்கள் இன்று அறக்கட்டளை அலுவலகத்தில் ஒன்று திரண்டு அறக்கட்டளை நிறுவனருக்கு ஆதரவு ஆறுதல் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து புதிய புத்தா அறக்கட்டளையின் துணை தலைவர் சரசு மற்றும் பயனாளர் கந்தசாமி உள்ளிட்டோர் நம்முடைய கூறுகையில், 
ஒரு கட்சியில் மாநில தலைவராக இருந்தாலும் ஒரு அமைப்பை உருவாக்கி எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் ஊனமுற்றவர்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நல உதவிகளை வழங்கி வருவதோடு அவர்களுக்கான அரசின் தேவைகள் அனைத்தையும் பெற்று தருவதை பொறுத்துக் கொள்ளாத இதே பகுதியை சார்ந்த சில தீய சக்திகள் ஒரு பெண் சமூக சேவகர் என்றும் பாராமல் தொடர்ச்சியாக தன்னை நோட்டமிடுவதும் எனது சேவையை தொடர்ந்து செய்யக் கூடாது என அறிவுறுத்தி கொலை மிரட்டல் விடுவதாக வேதனை தெரிவித்தார். மேலும் தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு என இந்த அறக்கட்டளையின் தலைவர் மேற்கொண்டு வரும் சேவையை பொறுத்துக் கொள்ளாதவர்கள் மீது தமிழக அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்திய குடியரசு ( கவாய் ) கட்சியின் மாநில துணை தலைவரும் புதிய புத்தக அறக்கட்டளையின் தலைவருமான சரசு அவர்களுக்கு உரிய உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். உதவி செய்வதற்கு மனம் இல்லாமல் செய்து  வரும் பெண் சமூக சேவகருக்கு அந்தப் பணியை செய்யக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்து வரும் தீய சக்திகளால் சேலம் பனமரத்துப்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 இந்த நிகழ்வின்போது அமைப்பின் நிர்வாகிகள் தமிழரசு மற்றும் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: