சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. ஏழாம் நாள் நிகழ்வாக தெய்வா அறக்கட்டளையின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் காலை சிற்றுண்டிகளை வழங்கினார்.
தமிழக துணை முதல்வரும், இளைஞர் அணி தலைவருமான உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் தெய்வா அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து 1 மாத கால கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் தெய்வா அறக்கட்டளையின் நிறுவனரும் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிலையில் 7 ம் நாளாக இன்று உதயநிதி ரசிகர் மன்ற சேலம் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற காலை சிற்றுண்டி வழங்குதலில் காலை சிற்றுண்டி வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

0 coment rios: