சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் தயவுலிங்கம். வழக்கறிஞர் பணி செய்து வரும் இவர் சேரும் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டை மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனாதை சடலங்களை மீட்டு அவர்களை நல்லடக்கம் செய்வது இலவச அமரர் உறுதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வரும் இவர் தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, நாள்தோறும் ஏழை எளிய ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கி வருகிறார். பருவநிலையின் காரணமாக இன்று காலை முதலே சேலம் மாநகரம் முழுவதும் மழை பெய்த நிலையிலும் கூட, தனது அறப்பணியை நிறுத்தி விடாமல் ஏழை எளியவர்களின் பசியை போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் குடைகளை பிடித்தவாறு தெய்வா அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் தெய்வீக லிங்கம் மற்றும் நிர்வாகிகள் சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்கிறனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி தனது கோட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் தெய்வலிங்கத்தின் இந்த செயலும் அந்த பகுதி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

0 coment rios: