சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம். தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் உரிமைகளை தமிழக அரசு பெற்று தரும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடக துணை முதலமைச்சர் நீர் பாசனத்துறை அமைச்சருமான சிவகுமார் டெல்லி சென்று மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு தாமதமாவது விரும்பவில்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மேகதாது அணை கட்டுவதால் பாதிப்பு இல்லை என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்தை சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆண்டுக்கு 20 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் நெல் விளைச்சல் இல்லாமல் பாலைவனம் ஆகும். மேகதாது வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் மூலம் நிலைநாட்டி தமிழக டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை திமுக அரசு பெற்றுத்தர முனைப்பு காட்ட வேண்டும். மேலும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. எனவே மேகதாது விவகாரம் தொடர்பாக பாரபட்சத்திற்கு இடம் கொடுக்காமல் தமிழகத்தின் உரிமைக்காகவும் தமிழக அரசு செயல் பட வேண்டும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

0 coment rios: