சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து திருச்சி சரத் என்பவர் நடத்திவரும் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதோடு சரத் உள்ளிட்ட ஆபாச நடனம் ஆடும் பெண்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் S.P அலுவலகத்தில் புகார் மனு.
தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய விழாக்களின் போது, மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களை மகிழ்விப்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் மேடை நடன நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமும் எந்த ஒரு ஜாதியை ஊக்கப்படுத்தும் பாடல்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று என்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இது போல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அசம்பாவிதங்களும் குற்றங்களும் நடந்துவிடும் என்று ஐயம் உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கட்சி பள்ளி கோணாங்கியூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மன்மதன் பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி சரத் பெங்களூரை சேர்ந்த லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய மற்றும் நிலா உள்ளிட்டூர் அருவருக்கத்தக்க மிகவும் மோசமான முறையில் ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் சம்பந்தமாக தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொது செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில் ஏற்கனவே திருச்சியை சார்ந்த மதன் என்பவர் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவர் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக மிக ஆபாசமான முறையில் உடைகளை அணிந்து பெண்களை நடனமாக வைப்பதாகவும் கணவன் மனைவி இருவருக்கும் நான்கு சுவற்றுக்குள் நடக்கக்கூடிய நிகழ்வை போல மேடையில் ஒளிபரப்ப கூடிய பாடலுக்கு பெண்களை உடலில் தொடக்கூடாது இடத்தில் தொட்டு நடனமாட வைக்கின்றார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை காவல் நிலையங்களில் திருச்சி சரத் என்பவர் மீது புகார் அளிக்கும் இதற்கு உண்டான எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சிஎஸ்ஆர் காப்பி மட்டுமே வழங்கி தங்களை அலைக்கழிப்பதோடு தங்கள் புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குறிப்பிடப்பட்டிருந்த மனுவில், திருச்சி சிவா என்பவர் ஒவ்வொரு முறையும் அவர் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் திருச்சி சரத் பெங்களூர் லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய நிலா சுமிதா இவர்கள் அனைவரையும் கடுமையான சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கிராம கோவில்களில் இது போன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் அருவருக்கத்த மற்றும் ஆபாசமான முறையில் நடத்தப்படும் இது போன்ற நடன நிகழ்ச்சி குழுக்களை உடனடியாக தமிழக அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.

0 coment rios: