சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியுறது நல்லாசியுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் தலைவர் அபிஷேக் மாங் சிங்வி ஆலோசனையின் படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களின் ஒப்புதலின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சுரேந்தர், திருவள்ளூர் தொகுதிக்கு பிரகாஷ் குமார், வடசென்னை தொகுதிக்கு சென்னை விஷ்வா, மத்திய சென்னை தொகுதிக்கு ஷாம் ஜெயகரன், சேலம் தொகுதிக்கு இர்பான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல ராமநாதபுரம் தொகுதிக்கு முகமது அபுதாஹிர், தென்காசி தொகுதிக்கு ராஜாராம் மற்றும் கன்னியாகுமரி தொகுதிக்கு டான் பெரின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறை சேலம் மாவட்ட தலைவராக இருந்த இர்பான், தற்போது சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை மாநில தலைவர் புரட்சித் தோழர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேலம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் மனித உரிமை துறையின் புதிய தலைவர் இர்பான் அவர்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

0 coment rios: