வெள்ளி, 7 நவம்பர், 2025

சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பித்து ஜனவரி 14 ஆம் தேதி வரை உற்சவம், மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற உள்ளதாக ஸ்ரீ ஐயப்பா ஆசிரம டிரஸ்ட் தலைவர் கே பி நடராஜன் தகவல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பித்து ஜனவரி 14 ஆம் தேதி வரை உற்சவம், மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற  உள்ளதாக ஸ்ரீ ஐயப்பா ஆசிரம டிரஸ்ட் தலைவர் கே பி நடராஜன் தகவல். 

சேலம் குரங்கு சாவடி ஸ்ரீ சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தின் தலைவர் கே பி நடராஜ், செயலாளர் சண்முகம் மற்றும் பொருளாளர் சரவணன் பெருமாள் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி, வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை உற்சவம் மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து நாள்தோறும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு அன்னதானம் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், கடந்த வருடத்தைப் போல இந்த வருடம் 4500 முதல் 6000க்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் நடைபயணமாக ஆந்திரா விசாகப்பட்டினம் விஜயவாடா ஹைதராபாத் கர்நாடகா மும்பை பெங்களூர் மைசூர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வர இருப்பதாகவும் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் அறக்கட்டளை மூலம் செய்து தர உள்ளதாகவும் தெரிவித்தனர். 
மேலும் சேலம் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து மீண்டும் சேலம் வரும் வரை அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட உள்ளதாகவும் இந்த ஆசிரமத்திற்கு பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்குபவர்கள் கோவில் அலுவலகத்தில் முறைப்படி செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொள்வதாகவும் இந்த ஆசிரமத்தை பொறுத்தவரை ஆசிரமத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வெளிநபர்கள் பணம் வசூலிப்பதற்கோ பொருட்களை வாங்குவதற்கோ ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை சார்பாக யாரையும் நியமிக்கப்படவில்லை எந்த சங்கத்திற்கும் அனுமதி வழங்கவில்லை அவ்வாறு யாராவது வசூலித்தால் ஐயப்பா ஆசிரமம் டிரஸ்ட் நிர்வாகம் பொறுப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: