சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பார்பிகுயின் உணவக நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டு படைப்பாக வர்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
சேலம் உட்பட தமிழகத்தின் பிரபல உணவக நிறுவனமான பார்பிகுயின் சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் விதமாகவும் பொது சேவைக்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அதில் மிகுந்த வரவேற்ப்பனையும் பெற்றுள்ள இந்த பார்பி குயின் உணவக நிறுவனம் இரண்டாம் ஆண்டு படைப்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி சேலம் குகை பகுதியில் உள்ள பார்பி குயின் உணவக வளாகத்தில் நடத்தியது.
இந்த போட்டிக்கான துவக்க நிகழ்ச்சிக்கு உணவக நிறுவனத்தின் உரிமையாளர் நவ்ஷத் தலைமை வகித்த நிகழ்வில், சேலத்தைச் சேர்ந்த வணிக வணிக தலைமை பயிற்சியாளரும் மற்றும் உளவியலாளருமான வேள்பாரி நடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.
சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு வரைபடங்களில் வர்ணம் தீட்டுதல், ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு என 2030 தொலைநோக்கு பார்வை என்ற தலைப்பில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெரும் நோட்டில் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி ஓவியங்களை தீட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் போது நிர்வாக இயக்குனர் நவ்ஷத், வணிக தலைமைத்துவ பயிற்சியாளரும் உளவியலாளருமான வேள்பாரி நடேசன், உதவி நிர்வாக இயக்குனர் பையாஸ் மற்றும் அனைத்து கிளை நிறுவனங்களின் பொது மேலாளர் உமர் உள்ளிட்டோர் மாணாக்கர்களின் வெளிப்பாட்டு திறமையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக மூன்று நபர்களுக்கு மிதிவண்டியும், இரண்டாம் பரிசாக மூன்று நபர்களுக்கு மிக்ஸிகளும் மற்றும் மூன்றாவது பரிசாக மூன்று நபர்களுக்கு குக்கர்களும் ஆகியவற்றுடன் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். பார்பி குயின் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

0 coment rios: