சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அமரகுந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மண்டல உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழகத்தில் ஆதரவற்ற சட்ட திட்டங்களை உள்ளதாகவும் வேதனை.
சேலம் மாவட்டம் அமரகுந்தியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 வது வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஷ் என்பவன் கடந்த மாதம் பத்தாம் தேதி அதே பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் முத்துசாமி என்பவரை தனது பெற்றோர் முன்னிலையில் கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மிகப் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் இணைந்து சேலத்தில் மண்டல அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் இளங்கோ தலைமை வகிக்க மாநில தலைவர் தேவி செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு பள்ளியில் காவல்துறை விசாரணை செய்த பின் ஆசிரியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு திரும்பியதாகவும், சம்பவம் நடந்து பல நாட்கள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் களம் இறங்கிய பின்னர் காவல் துறை சி எஸ் ஆர் மட்டும் பதிவு செய்ததும் பல போராட்டங்களுக்குப் பிறகு எஃப் ஐ ஆர் போட்டதும் வேடிக்கையாக உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் மாணவன் மீது கைது நடவடிக்கையில் காவல்துறை பின்வாங்குகிறது என்று வேதனை தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குநர்கள், தகாத மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை வெறி தாக்குதல் நடத்திய மாணவன் லோகேஷ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல்துறை மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று திரும்பிய காலம் போய் இன்று ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்கள் இன்று என்ன செய்வார்களோ என்ற உயிர் பயத்துடன் பள்ளிக்கு சென்று திரும்ப வேண்டிய ஒரு சூழல் தமிழகத்தில் நிலவி வருவதாகவும், ஆசிரியப் பெருமக்களுக்கு உயிர் பாதுகாப்பற்ற சட்டங்களை தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியா அவர்கள் இது போன்ற சட்டங்களை திருப்பி மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்த ஆசிரியர் பெருமக்களுக்கு வழிவகை செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தவறும் பட்சத்தில் தமிழக அளவில் இந்த போராட்டத்தை ஒன்றிணைத்து சென்னையில் விரைவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேவபிரபு முத்துக்குமரன் ரமேஷ் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: