ஞாயிறு, 9 நவம்பர், 2025

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும்புழா எழுச்சியுடன் நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ் பபு
சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா, தாதை சோழிய வேளாளர் திருமண தகவல் மையத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா, தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகியவை சேலம் தாதகாப்பட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஐம்பெரும் விழாவிற்கு சேலம் தாதை சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் நிர்வாகிகள் தங்கவேல் பரமசிவம் சங்கர் குமரவேல் நாதன் அசோக்குமார் மற்றும் சேகோ. ரவிக்குமார் உள்ளிட்டூர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஐம்பெரும் விழா கூட்டத்தில்  சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இனிவரும் காலங்களில் சோழிய வேளாளர் சமூக நலனுக்காக என்னென்ன செய்வது என்பது உள்ளிட்ட யோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தற்போதைய செயல் தலைவராக உள்ள அன்புமணி தலைவராக தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு முடிந்தவுடன் செயற்குழு மாற்றி அமைத்திடவும் மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பத்து ரூபாய் வருட சந்தா செலுத்த வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், அதே மண்டபத்தில் சேலம் தாதை சோழிய வேளாளர் நலச்சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவர்கள் ஆலோசனை மகளிர் நல மருத்துவ ஆலோசனை எலும்பு மருத்துவர் ஆலோசனை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. எடை ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஆகியவற்றுடன் மருத்துவர் ஆலோசனையின் படி தேவைப்படுபவர்களுக்கு இசிஜி எலும்பு அடர்த்தி பரிசோதனை நுரையீரல் தன்மை  பரிசோதனை ஆகியவற்றுடன் மருந்து மாத்திரைகள் இலவசமாகவும் வழங்கப்பட்டது சோழிய வேளாளர் உட்பட அந்த பகுதி மக்களிடையே வரவேற்பினை பெற்றது. இந்த நிகழ்வுகளில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு அசோக்குமார் தங்கவேல் உட்பட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: