சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி.
முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் நவம்பர் 11ஆம் தேதி வீரவணக்க நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 107-வது ஆண்டான என்று வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு அதன் பொதுச் சயலாளர் பர்னபாஸ் தலைமை வகித்தார். தலைவர் இமானுவேல் ஜெய்சி, செயல் தலைவர் தாரை குமரவேல், ஜென்னிஸ் அகாடமி தலைவர் கரோலின் எபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த நிகழ்வில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவரும் போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையும் செய்தனர். மேலும் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள வீர மரணம் அடைந்த போர் வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் முதலாம் உலகப் போரின் போது போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் செயல்கள் நினைவு கூறப்பட்டன. நிகழ்வில் சேலம் வரலாற்றுச் சங்கத்தின் உறுப்பினர்கள் பாபு என்கின்ற சாணவாஸ்கான், புகழேந்தி சாம்ராஜ் பிரதீப் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 coment rios: