சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் 3000 கோடி மோசடி செய்த நபர்களின் சொத்துக்களை முடக்கி, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மோசடி பணத்தை மீட்டு உரியவருக்கு வழங்க தவறும் பட்சத்தில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் எச்சரிக்கை.
சேலம் அம்மாபேட்டையில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் பெண்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி அளித்து வந்ததோடு தங்களது அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்தால் அதனை இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் சுமார் 80,000 நபர்களை ஏமாற்றி மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சம்பவம் சேலத்தில் கடும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகிகள் விஜய பானு, பாதிரியார் செந்தில்குமார் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவில் கையெழுத்து இடுவது என்ற நிபந்தனை ஜாமினில் தற்பொழுது வெளியில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பெறப்பட்ட தொகைகளை திருப்பி வழங்குவதாக ஒரு பொய்யான புகாரை கூறிவிட்டு காவல்துறை உதவியுடன் விஜயபானு பாதிரியார் செந்தில்குமார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் தங்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி முதலீடு செய்த பணத்தை பெறுவதில் தீவிரம் காட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த நலச் சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நலச் சங்கத்தின் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அஜித் முன்னிலை வகித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்கள் என 200க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு எதற்காக தாங்கள் எவ்வாறு எதற்காக பணம் சேகரித்து வைத்திருந்தோம், ஆசை வார்த்தையை நம்பி எவ்வாறு பணம் முதலீடு செய்தோம், தற்பொழுது முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததனால் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம் என்றும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். மேலும் அறக்கட்டளை நிர்வாகி விஜயபானுவை அணுகியபோது நான் ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றியவர் என்றும் காவல்துறையை வைத்து தங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியதோடு எங்கு வேண்டுமானாலும் சென்று பார்த்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக பதிவு செய்த அந்த நலச் சங்கத்தின் தலைவர் அன்பரசு செய்தியாளர்களும் கூறுகையில்,
தாங்கள் ஏமாற்றப்பட்ட விரக்தியில் தற்பொழுது வரை முப்பதுக்கு அதிகமானோர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் இனியும் ஒரு உயிரிழப்பு கூட நீங்களா வண்ணம் தடுக்க, பண மோசடியில் ஈடுபட்டவர்களின் பிணையை ரத்து செய்து அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைப்பதோடு முதலீடு செய்த பணங்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

0 coment rios: