சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 9 வினாடிகளில் பார்வையை சரி செய்யும் ஸ்மைல் ப்ரோ சிகிச்சை தொடக்கம். சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி தொடங்கி வைத்தார்.
சேலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஸ்மைல் ப்ரோ ( சிறிய கீறல் வழியாக கருவிழியை சரி செய்தல் ) என்ற உலகின் முதல் மற்றும் ப்ரோ ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்கி இருக்கிறது. ஒன்பது நொடிகளில் கிட்ட பார்வை மற்றும் சிதறல் பார்வையை சரி செய்வதற்கு ஒரு குறைவான ஊடுருவல் உள்ள மற்றும் அதிக துல்லியமான சிகிச்சை முறை. இந்த சிகிச்சைக்கு பிறகு கண் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் தேவை இல்லை என்பது மருத்துவர்களின் கூற்று. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர்கள் டாக்டர் கற்பகவல்லி மற்றும் ரம்யா சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில், சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அணில் குமார் கிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து ஸ்மைல் ப்ரோ திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
விழாவில் கலந்துகொண்ட சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அனில்குமார் கிரி பேசுகையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறையான ஸ்மைல் கிளாசிக் செயல் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இத்தகைய மிக நவீன சிகிச்சையின் பலன் வெகு சிலருக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது என்றும் இந்த புரட்சிகரமான சிகிச்சை செயல்முறைகள் அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்யப்படுவது மிக அவசியம் என்றார். தொடர்ந்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர் கற்பகவல்லி பேசுகையில் புரட்சிகரமான இந்த நுட்பம் குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல் முறையாகும் என்று குறிப்பிட்ட அவர் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் லேசர் அறுவை சிகிச்சைகள் போல் அல்லாமல் இந்த நவீன உத்தியில் ஒரு மிகச் சிறிய கீறல் மட்டுமே தேவைப்படுகிறது என்றும் கருவிழியின் நிலைத்தன்மையை பாதுகாப்பதுடன் அறுவை சிகிச்சைக்கு பின்பு வரக்கூடிய இது குறைவாகிறது மிக வேகமாக குணமடைவது மிக குறைவான கண் உலர்வு தன்மை மற்றும் மிக பிரமாதமான பார்வை திறன் பலன்கள் ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் சிறப்பான ஆதாயங்களை பெறுகின்றனர் என்றார்.
பின்னர் நோயாளிகளுக்கு இந்த புதிய மருத்துவ செயல்முறையின் பொருந்து நிலை குறித்து மருத்துவமனையின் மருத்துவ சேவைக்கான பிராந்திய தலைவர் டாக்டர் ரம்யா சம்பத் பேசுகையில் அதிக அளவு கிட்ட பார்வை உள்ளவர்கள் உட்பட பலருக்கும் இது பொருந்தும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருடமாக நிலையான கண்ணாடி பவர் உள்ளவர்கள் ராணுவம் காவல்துறை விமானப்படை மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற குறிப்பிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது என்றும் மெல்லிய கருவிழிப் படலம் உள்ளவர்கள் அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய முடியாதவர்களுக்கும் இந்த சிகிச்சை பெறலாம் என்றும் கண்களில் நடுக்கம் உள்ளவர்களுக்கும் கருவிழியின் தழும்பு ஏற்படுபவர்களுக்கும் கூட ஒளி விலகல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்வதில் தங்களுக்கு நல்ல அனுபவம் உள்ளதாக தெரிவித்த அவர் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் முழுமையான பரிசோதனை செய்து அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் பார்வை குறைபாடுகளை ஆராய்ந்த பின்னரே ஸ்மைல் ப்ரோ அவர்களுக்கு சரியான தேர்வாய் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்தார். ஸ்மைல் ப்ரோ என்பது உலகின் முதல் ரோபோடிக் முறையில் ஆன மடிப்பில்லாத குறைந்த ஊடுருவல் கொண்ட லேசர் திருத்த சிகிச்சை செயல்முறை உத்தியாகும் மென்மையானதாகவும் மற்றும் வெளியேற்ற சிகிச்சை ஆகவும் இது வடிவமைக்கப்படுகிறது என்றும் நவம்பர் 30ஆம் தேதி வரை ஸ்மைல் ப்ரோ பார்வை திறன் மதிப்பீடு மற்றும் ஸ்மைல் ப்ரோ அறுவை சிகிச்சைக்கான கட்டணம் மீது 50 சதவீதம் தள்ளுபடியுடன் செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: