சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும்
தொழில் முனைவு திறன்களை வளர்க்கும் சிறப்புச் சந்தை நடைப்பெற்றது
சேலத்தின் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் தொழில் முனைவுத் திறன்களை வளர்க்கும் நோக்கில் “இளம் தொழில் முனைவோர் சந்தை” என்ற சிறப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் திருமதி கவிதா முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழா சிறப்பாக நடைபெற வாய்ப்பு வழங்கிய சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் சொ. வள்ளியப்பா, திருமதி சீதா வள்ளியப்பா, துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும்தியாகு வள்ளியப்பா ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருமதி. சீ. சம்யுக்தா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். மாணவர்கள் தாங்களே உருவாக்கிய பல்வேறு கைவினைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் புதுமையான பொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்து விற்பனை செய்து தங்களது வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தினர் மேலும் மாணவர்களின் உற்சாகத்தையும் படைப்பாற்றலையும் அவர் வெகுவாக பாராட்டினர்,
இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நம்பிக்கை, குழுபண்பு மற்றும் தொழில் முனைவுத் திறனை வளர்க்கின்றன எனக் பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் மற்றும் முதல்வர் திருமதி இ.ஜெ.கவிதா ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தைச் சிறப்பித்தனர்.

0 coment rios: