சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் மாநில அளவில் 2025 ஆம் ஆண்டிற்கான யோகாசன போட்டி. தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.
பள்ளி மாணவ மாணவிகளின் உடல் நலனை பேணிக் காக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில அளவில் யோகா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நலபாண்டிற்கான யோகா போட்டி ஸ்ரீ பதஞ்சலி சித்தர் யோகா டிரஸ்ட் மற்றும் மல்லூர் ஸ்ரீ ஜோதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகா போட்டி சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்கம்பட்டியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஜனாப் சையத் சர்புதீன் சாஹிப், சேலம் கோட்டை கிரசன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் செயலாளர் முகமத் நுமான் சாஹிப், மரபு வழி சித்த மருத்துவரும் சாம்பவி சித்தா கிளினிக் நிறுவனருமான மருத்துவர் தங்கதுரை மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஈஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியினை சேலம் மல்லூர் பேரூராட்சி துணை தலைவரும் ஸ்ரீ பூவாயம்மாள் மூவிஸ் தயாரிப்பாளருமான வேங்கை அய்யனார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில அளவிலான போட்டியினை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் வயது வாரியாக பொது பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆசனங்களும் மற்றும் பொது பிரிவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு ஐந்து ஆசனங்களும் என போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் போட்டி நடுவர்களின் உத்தரவிற்கு ஏற்ப தங்களது உடல்களை வில்லாக வளைத்து ஆசனங்களை செய்து காட்டியது பார்வையாளர்களையும் பெற்றோர்களையும் பிரம்மிக்க வைத்தது.
இந்த போட்டியில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க சிபாரிசு செய்யப்படுவார்கள் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் யோகா கலையை பாடமாக கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இங்க துவக்க விழா நிகழ்வில் சிவம் யோகாசன சாலை யோகாச்சார்யா சோமசுந்தரம் வேர்ல்ட் டைகர் பிட்னஸ் ஜிம் உரிமையாளர் மணிகண்டன் பசுமை கலாம் நண்பர்கள் அறக்கட்டளை சமூக சேவகர் பாக்யராஜ் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரூபேஷ் சர்மா சேலம் செவ்வாய்பேட்டை சௌராஷ்ட்ரா வித்யாலயா பள்ளியின் யோகா ஆசிரியர் ஜெயா பிரகாஷ் ராயல் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ரமேஷ் யோகா கலை மாமணி ரமேஷ் யோகா ரத்னா பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: