திங்கள், 17 நவம்பர், 2025

சேலம் புத்தூர் அக்ரகாரத்தில் போலி நிறுவனம் கட்டுவதற்காக ஆக்கிரமித்த 9000 சதுர அடி அரசு புறம்போக்கு நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக விற்பனை செய்த கிறித்துவ அமைப்பினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் விரைவில் ஆளுநரை சந்தித்து மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள் ( ஆதார் மற்றும் குடும்ப அட்டை ) ஒப்படைக்கப்படும். தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி கடும் எச்சரிக்கை.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் புத்தூர் அக்ரகாரத்தில் போலி நிறுவனம் கட்டுவதற்காக ஆக்கிரமித்த 9000 சதுர அடி அரசு புறம்போக்கு நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக விற்பனை செய்த கிறித்துவ அமைப்பினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் விரைவில் ஆளுநரை சந்தித்து  மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள் ( ஆதார் மற்றும் குடும்ப அட்டை ) ஒப்படைக்கப்படும். தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி கடும் எச்சரிக்கை. 

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தூர் அக்ரஹாரம் பெரியார் நகரில் 1983 ஆம் ஆண்டு கிறித்துவ மதத்தை சார்ந்த தாஸ் செல்லதுரை மற்றும் சேவியர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் அங்கு வந்து இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி மற்றும் கல்வி வசதி செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒன்பதாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதனை முறைகேடாக விற்றது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் பலமுறை அரசு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 
இதன் அடிப்படையில் சேலம் புத்தூர் அக்ரஹாரம் பெரியார் நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் சேலத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டனர். ராம்ஜி அறிவுறுத்தலின் பேரில் இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றியம் வழங்கினர். சம்பந்தப்பட்ட தாஸ் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் கடந்த 1983 ஆம் ஆண்டு தங்களது பகுதிக்கு வந்ததாகவும் தங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவதாக போலியான ஆசை வார்த்தை கூறி வெளிநாட்டு பணம் பெற்று போலியான  அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி பணி செய்து வந்ததாகவும், அப்போது ஐந்தாண்டுகள் கழித்து தங்களது ஊரில் உள்ள நீர்நிலை கூட்டத்தில் ஒரு குடிசையை போட்டு அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் வெளிநாட்டு பணம் பெற்று அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 9000 சதுர அடி நிலம் எடுத்து குட்டைக்கு மண் நிரப்பி அதில் அலுவலகம் கட்டி நிறுவனம் நடத்தி வந்தார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு பணம் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு வராத காரணத்தினால் அறக்கட்டளை செயல்பாட்டில் இல்லை. தாஸ் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் எங்கள் ஊர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி நமது ஊருக்கு ஒரு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் சேலம் மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி வட்டார அலுவலர் அவர்களை சந்தித்து அனைவரிடத்திலும் சமுதாயக்கூடம் வேண்டி விண்ணப்பம் பலமுறை கொடுத்ததாகவும், இறுதியாக சேலம் ஆதிதிராவிடர் வட்டாட்சியர் அவர்கள் தங்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்றால் 8000 சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு இருந்தால் சொல்லுங்கள் உங்களுக்கு அந்த இடத்தில் மேற்கொண்ட சமுதாயக்கூடம் அமைத்துக் கொடுக்க ஆவணம் செய்கிறோம் என்ற சொன்னதன் அடிப்படையில் ஊர்மக்கள் ஒன்று கூடி போலி நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால் எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து திருமணம் காதணி விழா மஞ்சள் நீராட்டு விழா மற்றும் திருவிழா காலங்களில் அன்னதானம் வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மேற்கண்ட இடத்தில் நடத்தி வந்ததாகவும், அந்த இடத்தில் ஊர் பொது சேவைக்காக சமுதாயக்கூடம் அமைக்க தேர்வு செய்து கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அப்பொழுது உயிரிழந்த தாஸ் என்பவர் தங்கள் ஊர் மக்களுக்கு தெரியாமலேயே போலி நிறுவன பெயருக்கு பட்டா வாங்கி உள்ளது தற்பொழுது தெரிய வந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாஸ் பெயரின் பட்டா உள்ளதால் அவர் இறந்து விட்டபடியால் அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து கடந்த 12ஆம் தேதி திலகம் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய்க்கு தனிநபருக்கு விற்பனை செய்துள்ளார்கள். இதற்கான வில்லங்க சான்றும் இத்துடன் இணைத்து சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மனுவில் மேற்கண்ட இடம் முழுவதும் அரசு சொந்தமான நிலம் ஆகையால் விற்பனை செய்வதை ரத்து செய்து எங்கள் ஊர் பயன்பாட்டிற்கு கொடுக்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக புத்தூர் அகர்வாரம் பெரியார் நகர் மக்கள் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
தொடர்ந்து தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி தலைமையிலான ஊர் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஏற்கனவே பலமுறை அரசுத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தினால், இந்த முறைகேடான சம்பவத்திற்கு துணை போன தாஸ் என்பவரின் மனைவி மற்றும் மகன் உட்பட இதற்கு மூல காரணமாக செயல்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்பொழுது மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கியுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரும் ஒருவேளை நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், ஊர் பொதுமக்களில் நலனுக்காக சமுதாயக்கூடம் அமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கூறிய ராம்ஜி விரைவில் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புத்தூர் அக்ரஹாரம் பெரியார் நகர் மக்களை ஒன்றிணைத்து மத்திய மாநில அரசுகள் வழங்கி உள்ள ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் காணப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: