சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயிகள் ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தில் மாநிலத் தலைவர் வேலுச்சாமி, கர்நாடக முதல்வர் சித்திராமையாவின் செயல்பாட்டிற்கு, தனது அறிக்கையில், கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையாவின் இந்த முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகத்தின் உரிமைக்கா தமிழக விவசாயிகள் ரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

0 coment rios: