S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று 2025, 26 ஆம் ஆண்டு வழங்கப்படும் என்று அறிவித்து தற்போது வரை வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்ட போராட்டம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அரசால் விவசாயிகளுக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி முதற்கட்ட போராட்ட அறிவிப்பினை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு அரசு 2025 -2026 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின், மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000/- ம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டும் தற்போது வரை அரசாணை வெளியிடவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கு உண்டான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ள நிலையில், கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் மூலம் பழைய கிரைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3290.50 மட்டுமேதான் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு எட்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்கவில்லை. தமிழகத்தில் உள்ள கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இதனை கருத்தில் கொண்டு திமுக அரசை கண்டித்து வருகின்ற 10.1.2026 அன்று காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முதற்கட்டமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எனவே இந்த ஆர்பாட்டத்திற்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்பளை செய்த அனைத்து விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என இந்த அறிக்கையின் மூலம் அழைப்பு விடுக்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சேர்ந்த மாநிலத் தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.



0 coment rios: