சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய விழா. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டு.
சோனாவள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இவ் விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ,பேச்சுப்போட்டி என்ற தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சேலம் மாநகரட்சி ஆணையாளர் இளங்கோவன் விழாவில் கலந்து கொண்டு பாரதி கண்ட கனவு இந்தியாவைப் பற்றி நினைவு கூர்ந்து பேருரையாற்றினார். விழாவிற்கு சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை ஏற்று பாரதியாரின் கவிதை நுட்பங்களை எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் இரா.வசந்த மாலை கலந்து கொண்டு பாரதியாரின் கவிதைகள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் எவ்வாறு ஊக்கமளித்தன என்பதைப் பற்றி சிறப்புரையாற்றினார். சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி இயக்குநர் டாக்டர் கார்த்திகேயன் பாரதியின் புரட்சிப் பாடல்களால் நாம் சுதந்திரம் பெற்றதைப் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் பள்ளி முதல்வர் திருமதி கவிதா பாரதியின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சேலம் மாநகரட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு விருந்தினர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பாரதியாரின் பெருமையைப் போற்றும் விதமாக பல்வேறு பள்ளிகளில் இருந்து போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.



0 coment rios: