சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மேச்சேரியில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த அதிகாரிகள் மீதும், மரங்களை வெட்டித் திருடிச் சென்றவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய, காவல் நிலையத்தில் சேலத்தைச் சேர்ந்த வழக்குறைஞர் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார்.
சேலத்தைச் சேர்ந்த சிறந்த சமூக ஆர்வலரும், வழக்குறைஞருமா பூமொழி சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில் சேலம் மாவட்டம், மேச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு மேலாண்டியூர் அருகே உள்ள பாதை புறம்போக்கு வழித்தடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில், பாதை புறம்போக்கு வழித்தடத்தின் ஓரமாக இருந்த நன்கு வளர்ந்த தென்னை மரம், வேப்பமரம், ஆயமரம் ஆகிய மரங்களை, சென்ற 08.12.2025 அன்று மேட்டூர் தாசில்தார் ரமேஷ் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார்,
மேச்சேரி RI கவுசிக்குமார். கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அர்ச்சுனன் ஆகியோர். மோட்டார் வாகன பதிவு எண் இல்லாத JCB இயந்திரம் கொண்டு சட்டவிரோதமாக தள்ளி வேரோடு பிடுங்கி எறிந்துள்ளனர்.
பிடுங்கி எறியப்பட்ட தென்னைமரம், வேப்பமரம், ஆயமரம் ஆகிய மூன்று மரங்களில், தென்னை மரத்தை தவிர்த்து வேப்பமரம். ஆயமரம் ஆகிய இரண்டு மரங்களை. 11.08.2025 அன்று மேலாண்டியூரைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி த/பெ. பொன்னுசாமி என்ற நபர்.
மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு அறுத்து வாகனத்தில் வைத்து திருடிச் சென்றுள்ளார்.
பொதுமக்களுக்கும். சுற்றுச்சூழலுக்கும் பெரிதும் பயனளிக்கும் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனித கடமையாகும். குறிப்பாக, அரசு அதிகாரிகளின் முழு கடமையாகும். இந்நிலையில், மேற்கண்ட அரசு அதிகாரிகளே மரங்களை JCB இயந்திரம் கொண்டு சட்டவிரோதமாக தள்ளி வேரோடு பிடுங்கி எறிந்துள்ளனர். மேற்கண்ட அதிகாரிகள் மீதும், இரண்டு மரங்களை வெட்டி திருடிச் சென்றவர் மீதும் மரங்கள் பாதுகாப்புச் சட்டப்படியும், குற்றவியல் சட்டப்படியும் உடனடியாக வழக்குபதிவு செய்து. சம்மந்தப்பட்டர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்திட, தகுந்த ஆதாரங்களுடன் மேச்சேரி காவல் நிலையத்தில், 12.12.2025 நேற்று புகார் அளித்து CSR பெற்றுள்ளேன் என்றும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடி உரிய நீதி பெறுவேன் என்றும் வழக்குறைஞர் பூமொழி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.



0 coment rios: