சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
திருவண்ணாமலையில் நடைபெறும் மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்வு. நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளும் சேலம் கிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் வெங்கடேசன். இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து மாநாட்டில் கலந்து கொள்ள முன் வருவதாக உற்சாகம்.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தற்பொழுதே அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தலைமையின் சார்பில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும், மாவட்டம் வாரியாக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சேலம் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட பிச்சிப்பாளையம் மற்றும் அம்மாபேட்டை பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் சேலம் மாநகர இணை இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ்,
தனக்கென்று ஒதுக்கப்பட்ட 4,900 உறுப்பினர்களுக்கு தலைவர் மற்றும் இளம் தலைவர் ஆகியோரின் புகைப்படங்கள் பொருத்தப்பட்ட டிஷ்கள் மற்றும் லோயர்கள் வழங்குவதுடன் கூடுதலாக அடையாள அட்டையையும் விநியோகித்து வருகின்றார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக அரசு மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதன் ஒரே காரணத்திற்காக எனக்கு ஒதுக்கப்பட்ட பணியினை நான் சிறப்பாக செய்து வருகின்றேன் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பணியை மேற்கொண்டு வருவதாகவும், புதிதாக இளைஞர்கள் அனைவரும் திமுகவில் இணைந்து வருவது பெருமையாக உள்ளது என்றும் அவர்களுக்கும் டீஷர்ட்டுகள் லோயர்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களை மாநாட்டில் அழைத்து செல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று பெருமைப்பட தெரிவித்தார் சேலம் மத்திய மாவட்ட திமுகவின் சேலம் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ்.



0 coment rios: