சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சதுரங்க போட்டி. சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 26 விளையாட்டுப் போட்டிகளுக்கு தலைமையின் ஒப்புதல் பெற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சேலத்தை அடுத்துள்ளார் அரியானூரில் நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளரும் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளருமான ஃபிரண்ட்ஸ் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியினை வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளரும் வீரபாண்டி அட்மா குழு தலைவருமான வெண்ணிலா சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியினை துவக்கி வைத்தார். ஆறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் சேலம் கொண்டலாம்பட்டி அரியனுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றிக்கான முனைப்புடன் உரையாடினர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு சான்றிதழ்கள் மற்றும் ரொக்க தொகையும் பரிசு தொகைகளாக வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதே போல கைப்பந்து போட்டி மாரத்தான் உள்ளிட்ட 26 வகையான போட்டிகள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளரும் கெங்கவலி தனி சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளருமான ஃபிரண்ட்ஸ் ரமேஷ் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் செல்வகுமார், துணை அமைப்பாளர்கள் விஜயகுமார், ரமேஷ்பாபு, உட்பட ஒன்றிய அமைப்பாளர்கள் சின்ராஜ் ரமேஷ் கேசவன், அருள்முருகன் பிரதீப் லோகேஷ் சூர்யா தினேஷ் கோபி மற்றும் விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: