சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கு வீரபாண்டி தொகுதி திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் உற்சாக வரவேற்பு.
திமுக இளைஞரணி சந்திப்பு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். திருவண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையம் வந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி தொகுதி திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் விமான நிலையத்தில் காத்திருந்து சேலம் வந்த தமிழக முதலமைச்சருக்கு பூங்கொத்தும் புத்தகத்தையும் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.
முன்னதாக விமான நிலையத்தில் வந்து இறங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு முதற்கட்டமாக சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி தொகுதி திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.



0 coment rios: