சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தங்கத்தை போலவே ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளியின் விலை. சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி முடக்கம்.
மாங்கனி நகரமான சேலம் உட்பட மாவட்ட முழுவதும் பிரதான மற்றும் பாரம்பரிய தொழில்களில் வெள்ளி கொலுசு உற்பத்தியும் ஒன்றாகும். அந்த வகையில் சேலத்தை எடுத்துள்ள சிவதாபுரம் பனங்காடு திருமலை கிரி உட்பட சேலம் மாநகரில் செவ்வாய் பேட்டையின் பெரும்பாலான பகுதிகள் என மாவட்ட முழுவதும் இந்த தொழிலையே நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக, தங்கத்தை போலவே வெள்ளியின் விளையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் முடங்கி உள்ளதோடு போதிய ஆர்டர்கள் இல்லாமல் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக வெள்ளியின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த தொழிலை நம்பி உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் தற்பொழுது எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட கொலுசின் விலை தற்பொழுது 10,000 ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் இந்த தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும், நடைபாண்டே இந்த அளவு விலை உயர்ந்துள்ள வெள்ளியின் விலை அடுத்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும் என தெரியவில்லை என ஐயம் எழுப்பும் அவர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மாற்று தொழிலை நாடி செல்ல வேண்டிய ஒரு சூழலும் ஏற்படும் என்றனர். வெள்ளி பொருட்களை சேமிப்பாக நினைத்து பயன்படுத்தினால் அவர்களுக்கு பிற்காலத்தில் பயனுள்ளதாக அமையும் என்றும் பயன்படுத்தியும் கொள்ளலாம் இக்கட்டான சூழலில் அதை அடகு வைத்து அதன் மூலம் கடன் தொகையும் பெறலாம் என்று தெரிவித்தார் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன்.
கொரோனா காலகட்டத்தில் கொலுசு உள்ளிட்ட வெளி பொருட்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகம் உட்பட கேரளா கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநில ஆர்டர்களையே பெரிதாக நம்பி உள்ள சேலம் மாவட்ட வெளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு தற்பொழுது இந்த வெள்ளியின் விலை தங்கம் விலை போன்று ஜெட் வேகத்தில் உயர்ந்து, ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.



0 coment rios: