ஈரோட்டில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்றும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் கலந்து கொள்ள உள்ளார் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பார்வையிடுவதற்காக இன்று பொதுச் செயலாளர் புஜ்ஸி ஆனந்த் ஈரோடு வருகை தந்தார். அவரை தவெக தலைமை ஒருகிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,
தவெக சார்பாக திருச்செங்கோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாளை செயல்வீர்ரகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெறுகிது. இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்கிறார்.
18.ம் தேதி நடைபெறும் விஜய் பிரசார கூட்டத்திற்கு பணிகள் வேகமாக நடைபெறுகிறது. நிபந்தனைகளை முடித்து கூட்டத்துற்கு தயார் செய்வோம். அதன் பின் காவல்துறையில் அனுமதி் பெற்று அனைவரும் பாராட்டும் வகையில் கூட்டம் நடைபெறும்..
இந்த நிகழ்ச்சிக்காக காவல் துறை சார்பில் 2 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும்.
அனைவரும் இணைந்து இயக்கத்திற்காக தன்னலம் கருதாமல் எதிர்காலத்தில் தூய்மையான மக்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவோம்.
பாண்டிச்சேரிக்கு அடுத்ததாக ஈரோட்டில் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுதினத்திற்குள் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும். அதன் பின் காவல் துறை மூலம் அனுமதி பெறப்படும் என்றார்.



0 coment rios: