சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி. மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு..
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் தேர்தல் பணிகள் முழுவீச்சில் முடக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களான EVM மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை அறியும் V V PAT இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி கடந்த 11ம் தேதி முதல் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 5 வது நாளான இன்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்றன. சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு பணியில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற சரிபார்ப்பு பணிகளை உன்னிப்பாக கவனித்தனர். மேலும் சரிபார்ப்பு என்ற பெயரில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இந்த வாக்குப்பதிவு இயந்திர மையத்திற்கு எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தனர். தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகள் சந்தேகங்களுக்கு பதில் அளித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் சேலம் ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு அதனை கடைப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மத்திய மாநில காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த ஆய்வு பணியில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஊழிட்ட கட்சிகளும் மாநில கட்சிகளான அதிமுக திமுக பாமக தேமுதிக தவெக மற்றும் தவாக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: