சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால் மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.
தமிழக விவசாயிகள் படும் துயரத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கான கொள்முதல் விலையை பெற்று தர வேண்டும் என்பதற்காக தனி ஒரு மனிதராக தமிழக விவசாயிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கியவர் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு. அவர்கள் அமைப்பை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, விவசாயிகளின் தேவைக்காக பலகட்ட போராட்டங்களை அறிவித்து அதனை முறைப்படி நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் நாராயணசாமி நாயுடு அவர்கள். தற்பொழுதும் தமிழக விவசாய குடி பெருமக்களால் போற்றப்படும் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது நினைவு தினம் இன்று அனைத்து விவசாய பெருங்குடி மக்களாலும் கடைபிடிக்கப்பட்டது. இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே தமிழக விவசாயிகள் சங்கத்தில் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்த மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது ஆண்டு நினைவு நாளில் அன்னாரது மணிமண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அதன் மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையில், நாராயணசாமி நாயுடு அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டத்துடன், அவரது நினைவிடத்திற்கு மலர்வளையம் வைத்து மலர்தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர் ராஜா பெருமாள், திருப்பத்தூர் கணதி, சேலம் மாவட்ட தலைவர் ஏழுமலை உட்பட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர். அப்போது உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளிடம் கூறுகையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக அறிவித்த தமிழக அரசு தற்பொழுது வரை அதனை நிறைவேற்றி தரவில்லை என்றும் இதற்காக பலகட்ட போராட்டங்கள் நடந்தப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது தமிழகத்தில் பிரதானமாக உள்ள பசும்பால் மற்றும் எருமை பாலிற்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டதாகவும், தமிழக அரசின் நிறைவேற்றாத பட்சத்தில், தமிழகத்தில் பால் உற்பத்தி எடுத்த போராட்டம் நடத்தப்படுவது உடன் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொண்டு வருவதை தடுக்க மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு தலைவர் வேலுச்சாமி அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் புயல் கனமழையின் காரணமாக அந்தப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் வரும் 29ஆம் தேதி ஏற்கனவே அறிவித்ததை போன்று தமிழகம் முழுவதும் கரவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் தமிழக விவசாயிகள் சங்க விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இந்த 41 வது நினைவு தினத்தில் கடுமையான எச்சரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.



0 coment rios: