CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியின் சிறப்பு என்னவென்றால்,
வெளிநாடுகளில் இருந்து பத்து நாடுகளைச் சேர்ந்த நேரடி வாங்குநர்கள், இதில் பங்கேற்க உள்ளனர்.
அதோடு, இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 320 வாங்குநர்களை அழைத்து வந்து,கண்காட்சி அரங்குகளில் நேரடியாக சந்தித்து வணிகஉரையாடல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் மூலம்,நம் தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறோம், இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வாய்ப்பாகும்.
CMAI என்பது 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் சங்கமாகும்.
இந்திய அளவில் ஆடை உற்பத்தியாளர்களுக்கான மிகப்பெரிய சங்கங்களில் இதுவும் ஒன்று, இதன் முக்கிய நோக்கம், நேரடி உற்பத்தியாளர்களும் தொழில்துறை குழுமங்களும் இதில் பங்கேற்பதுதான், இந்த வர்த்தகக் கண்காட்சி மூலம், முழு தொழில்துறை அமைப்பிற்கும் பயன் கிடைக்கும், துணி வழங்குநர்களுக்கும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் சமமான நன்மை ஏற்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ( ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சேம்பர் ஆப் காமர்ஸ் & இன்ட்ரஸ்ட்ரி )
ஈரோடு மாவட்ட தொழில் வர்த்தக சபையின் தலைவர் வி.பி.சுப்பிரமணியம், செயலாளர் பிரேம் நாராயணன், ( எக்ஸிக்யூடிவ் பிரசிடெண்ட் ) செயல் தலைவர் வி.டி கருணாநிதி, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சிவனந்தன், FATIA தலைவர் வி.கே ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன்,
CMAI பொதுச்செயலாளரும், பேப் ஷோ சேர்மன் நவீன், CMAI சேர்மன் வெண்டர் ஆனந்த் உட்பட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் என ஜவுளி வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
CMI துணிக்காட்சி, மும்பை நகரில், ஏப்ரல் மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.



0 coment rios: