காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா
மனித உரிமைகள் காப்பாளர்கள் சார்பாக 78 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின விழா காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட தலைவர் ரசூல் மொய்தீன் தலைமையில் நடை பெற்றது.
சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் சின்னராஜ் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு மாநில தலைவர் அந்தோணி ராஜ், தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவி லோகநாயகி, தமிழ்நாடு மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, கோவை மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் பாஷா, கோவை வடக்கு மாவட்ட தலைவர் மோகனசுந்தரம், கோவை மாவட்ட அமைப்புச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மனித உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். முடிவில் கோவை மாவட்ட செயலாளர் நண்பரசன் நன்றி கூறினார்.



0 coment rios: