*ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.*
**************************
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு த.மா.கா.தலைவர் .ஜி.கே வாசன் எம்.பி தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜி. கே.வாசன் முன்னிலையில் த.மா.கா.வில் இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஒட்டி ஈரோடு மாநகர் முழுவதும் கட்சிக்கொடி தோரணைகள் கட்டப்பட்டிருந்தன. விழா நடைபெறும் இடத்திற்கு தமிழக முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக கொங்கு மண்டல நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மா பழ வாழை எனத் தொண்டர்கள் கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கினர்.
காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோர் படத்திற்கு ஜிகே வாசன் எம்பி, தமிழருவி மணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.
தமிழகம் முழுவதும் வந்திருந்த நிர்வாகிகள் அவர்கள் பாரம்பரிய படி நினைவு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் இளைஞர் சங்க நிர்வாகி ரமேஷ், பொருளாளர் ராமன், பிரகாஷ் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: